மன்னார் நலன்புரி சங்கத்தினரால்(ஐக்கிய இராச்சியம்) 28 லட்சம் பெறுமதியான மருத்துவ உபகரன பொருட்கள் நானாட்டான்
மற்றும் அடம்பன் பிரதேச வைத்தியசாலைகளின் பாவனைக்கு இன்றைய தினம் (16.08.2022)வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மருத்துவ உபகரன பொருட்கள் யாவும் மன்னார் நலன் புரிச் சங்கத்தின் ஐக்கிய ராஜ்ய சங்கத்தின்
தலைவர் திரு. ஜேம்ஸ் பத்தினாதன் , இச் சஙகத்தின் மன்னார் கிளையின் தலைவர்.திரு. ரேஜி ஜெயபாலன் மற்றும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களால் , மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் தர்மராஜா வினோதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்படி நானாட்டான் வைத்தியசாலைக்கு..........
* . அவசர சிகிச்சை வண்டில்
* . நோயாளர் கண்காணிப்பு மருத்துவ உபகரணம்
*. சளி அகற்றும் உபகரணம்
* . சிசுக்களின் நிறைய அளவிடும் கருவி
* . ஓட்சிஜன் செறிவை அளக்கும் கருவி
* . ஒட் சிஜன் விநியோக கட்டுப்பாட்டு பொறி போன்றவையும்
அடம்பன் வைத்தியசாலைக்கு........
1.அவசர சிகிச்சை கட்டில் ஒன்று
2.அவசர சிகிச்சை வண்டில்கள்
3. நோயாளர் கண்காணிப்பு மருத்துவ உபகரணம்
4..சளி அகற்றும் உபகரணம் ஒன்று
5.குருதி அமுக்க அளவீட்டுமானி
6. E C G இயந்திரம்
7. சிரிஞ்ச் பம்பி
8. சேலம் விநியோக பம்பி
9. தற்காலிகசெயற்கை சுவாச வழங்கிக் கருவி பெரியவர்களுக்கானது (1) சிஎஸ்கே சுவாச கருவி
சிறியவர்களுக்கானது(1)
10. ஒட்சிஜன் செறிவை அளவிடும் கருவி
11.குருதி வெல்லத்தை (SUGAR)அளவிடும் கருவி அதற்கான பரிசோதனை பட்டி 500 போன்ற 28 லட்சத்து 25,400 ரூபாய்
பெருமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட வைத்திய அதிகாரி, நானாட்டான் வைத்திய அதிகாரி, அடம்பன் பிராந்திய பல் வைத்திய
அதிகாரி மற்றும் குறித்த வைத்தியசாலைகளின் நோயாளர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.