24.08.2022 இன்று மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் MOH தெரிவு செய்யப்பட்ட போசாக்குக் குறைந்த குழந்தைகளுக்கன சத்துணவு வழங்கல் ஆரம்ப நிகழ்வு மன்னாரிலும், முருங்கனிலும் நடைபெற்றது.
இச்சத்துணவு திட்டம் மன்னார் நலன்புரிச்சங்கம் (UK) ஐக்கிய இராஜ்யம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந்நிகழ்வுக்கு மன்னார் நலன்புரி சங்கம் (UK) ஐக்கிய இராஜ்யம் தலைவர் திரு . ஜேம்ஸ் பத்தினாதன்(விமல் ) அவர்களும் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் Dr.வினோதன் அவர்களும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான Dr.ரூபன் மற்றும் Dr.றோய் அவர்களும் மன்னார்மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.றெஜி அவர்களும் கலந்துகொண்டு இச்சத்துணவு வழங்கும் நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இச்சத்துணவுத்திட்டத்தினை நானாட்டான் பிரதேசத்துக்கு மட்டுமல்லாமல் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக வழங்குவதற்குரிய முயற்சியினையும் இன்றைய தினம் நடைபெற்ற ஆரம்பநிகழ்வினையும் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.ரூபன் அவர்கள் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது சங்க நிருவாக உறுப்பினர் திரு. மோசஸ் தாயான் அவர்கள் எமது சங்கத்தினூடாக மன்னார் பிரதேசத்திலுள்ள பள்ளிமுனை பகுதியில் இருக்கும் 25 குழந்தைகளுக்கு இச்சத்துணவை தொடர்ந்து 6 மாத காலத்துக்கு கொடுப்பதற்கு பண உதவி வழங்க முன்வந்துள்ளார் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிதத்தருகிறோம். அவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் பல.
மன்னார் மாவட்டத்தில் மேலும் இச்சத்துணவு திட்டத்தை கூடிய சிறார்களுக்கு கொடுப்பதற்கு தேவை இருப்பதால், நீங்கள் இத்திட்டத்துக்கு உதவ நினைத்தால் எங்கள் சங்க உறுப்பினர்களோடு தொடர்பு கொண்டு, தகவல் அறிந்து, உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
We are glad to inform you that the AAGAARAM project - to provide nutritional food for the malnutrition children in Mannar district was implemented today 24th August 2022 in Mannar and Nanattan divisional areas. MWAUK chairperson Mr. James Pathinathan along with Dr. Vinothan, Dr. Reuben Dr. Roy and MWC chairperson Mr. Regi Jeyapalan handed over these AAGAARAM packets to the children who were selected by the MOH.
We thank Dr. Reuben who organised this event and also has taken the initial steps to organise this project to be carried out in the other
divisional areas in the Mannar district. We also sincerely thank our committee member Mr. Moses Thayan who has come forward to sponsor 25 children’s (from Pallimunai area) nutritional food packs
for the next 6 months.
Since we have more need to provide these nutritional food packs throughout Mannar district, if anyone is willing to sponsor a few children for this project, we kindly request you to get in touch with one of our committee members.